- நல்லெண்ணை, பாதாம் எண்ணை இரண்டையும் சமமாக எடுத்து உடல் முழுவதும் தடவி, 3 மணி நேரம் ஊறவையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முகச் சுருக்கம் மாறும்
- சந்தனம் சந்தனப்பொடியுடன், பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவர முகச் சுருக்கம் நீங்கும்.
- சிறிதளவு கடலை மாவுடன், கேரட் ஜூசை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவவும். இப்படி செய்தால், நாளடைவில் முகச்சுருக்கம் நீங்கும்.
- பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம். இதனால் சரும நிறம் கூடுவதோடு, சருமம் ஈர்ப்பதமாகவும் சுருக்கங்கள் இன்றியும் இருக்கும்
- அடிக்கடி தக்காளி சாறு அல்லது பாதாம் எண்ணெய் அல்லது நன்றாக பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால், விரைவில் சுருக்கம் உண்டாவது தாமதமாகும். உங்களது சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.
- பாலேட்டுடன் பன்னீர் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். பதினைந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ சருமம் இறுக்கமாகி மென்மையாகி விடும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று தடவை செய்வது நல்ல பலன் தரும்.
- எலுமிச்சையின் தோலை காய வைத்து பொடித்து பன்னீரில் கலந்து தயிர், முள்ளங்கி சாறு கலந்து முகத்தில் தேய்த்து ஊறியதும் கழுவினால் முகம் பளபளப்பாகும். இது உங்களது இளமையை கெடுக்கும் சுருக்கங்களை போக்கும்.
- தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.
- முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பாசிப்பயறு மாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
- சருமம் மிருதுத்தன்மையை இழந்து விட்டால், தக்காளி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள். இதனை தொடர்ந்து வாரம் இருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.
- அதிகாக மேக்கப் போட்டதால் சருமம் இழந்த ஈரப்பதத்தைப் பெற தேங்காய் எண்ணெயை முகம் முழுவதும் மசாஜ் செய்துவிட்டு தூங்குவது சருமத்திற்கும் நல்லது
- எலும்பிச்சை சாறு, பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து இரவில் தடவி வந்தால் பருக்கள் நீங்கும்.
- வறண்ட சருமம் கொண்டவர்கள் மஞ்சள் பூசுவதைத் தவிர்த்துவிடுவதும், அதிககாரத்திறன் கொண்ட சோப்புகளைப் போடுவதையும் தவிர்க்க வேண்டும். இரவில் தூங்கும் போது தேங்காய் எண்ணெய் தேய்த்துவிட்டு தூங்குவதும் நல்லது.
- 50 மிலி கிளிசரின் மற்றும் 50மிலி பன்னீர் ஆகிய இரண்டையும் ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்து கலந்து கொள்ளவும். கலந்தவுடன் இந்த கலவையை ஒரு காற்று புகாத பாட்டில் அல்லது ஜாரில் ஊற்றிக் கொள்ளவும். ஒரு காட்டன் பஞ்சில் இந்த திரவத்தை எடுத்து நீங்கள் பயன்படுத்தலாம். இரவு முழுவதும் அப்படி விட்டு விடுங்கள். மறுநாள் காலை உங்கள் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்.
- இரண்டு ஸ்பூன் சர்க்கரை, இரண்டு ஸ்பூன் கிளிசரின், இரண்டு ஸ்பூன் லாவெண்டர் எண்ணெய் அல்லது ஜிரேனியம் எண்ணெய், ஒரு ஸ்பூன் கல் உப்பு, அரை எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவை எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் போட்டு கலந்துக் கொள்ளவும். பின்பு இதனை உங்கள் சருமத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். இந்த கலவையில் உள்ள சர்க்கரை உங்கள் சருமத்தில் ஊடுருவி அழுக்கை போக்கி சருமத்தை சுத்தம் செய்கிறது. பின்னர் தண்ணீரால் உங்கள் சருமத்தை கழுவினால் ஒரு மிருதுவான சருமம் தயார்.
- ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்வோம். ஒரு ஸ்பூன் சோளமாவு, இரண்டு ஸ்பூன் ஐஸ் தண்ணீர், ஒரு ஸ்பூன் கிளிசரின் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு, முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி காய விடவும். பின்பு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்
Thursday, March 18, 2021
முகச் சுருக்கம் நீங்க
Friday, November 6, 2020
முதுகு வலி - காரணங்கள் மற்றும் சிகிச்சை
காய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறி என்பது போலவே, கீழ் முதுகு வலியும் ஏதோ ஒரு நோயின் அறிகுறியே தவிர, இதுவே ஒரு தனிப்பட்ட நோயல்ல! இந்த வலிக்குப் பல காரணங்கள் உண்டு. முதுகுப் பகுதியைச் சார்ந்த எலும்புகள், தசைகள், தசை நாண்கள், இடைவட்டு (Inter vertebral Disc) ஆகியவற்றில் ஏற்படுகிற பிரச்சினைகளை இதற்கு முதன்மைக் காரணங்களாகச் சொல்லலாம்.
சில நேரம் வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளாலும் கீழ் முதுகில் வலி உண்டாகலாம். உதாரணத்துக்கு, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பையில் கல் உள்ளவர்களுக்குக் கீழ் முதுகில் வலி ஆரம்பித்து, முன் வயிற்றுக்குச் செல்லும். வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ள பெண்களுக்குக் கீழ் முதுகில்தான் முதலில் வலி ஆரம்பிக்கும். பொதுவாக, கீழ் முதுகு வலிக்கு 90 சதவீதம் முதுகெலும்பில் பிரச்சினை இருக்கும். மீதி 10 சதவீதம் வயிற்றுப் பகுதி தொடர்பாக இருக்கலாம். மேலும் சில காரணங்கள் கூன் விழுந்த நிலையில் உட்காருவது, வேலை நிமித்தமாகத் தொடர்ச்சியாக கணினி முன்னால் உட்கார்ந்தே இருக்க வேண்டிய சூழல், தினமும் இருசக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணிப்பது, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணம் செய்வது, அதிக எடையைத் தூக்குவது, உடற்பயிற்சி இல்லாதது, ஊட்டச் சத்துக்குறைவு, தரையில் வழுக்கி விழுவது, உயரமான இடத்திலிருந்து குதிப்பது, திடீரெனக் குனிவது அல்லது திரும்புவது, உடல்பருமன் போன்ற காரணங்களால் முதுகெலும்பு இடைவட்டில் அழுத்தம் அதிகமாகிக் கீழ் முதுகில் வலி ஏற்படும். காச நோய் ‘ஆஸ்டியோமைலிட்டிஸ்' (Osteomyelitis), ‘ஸ்பாண்டிலிட்டிஸ்' (Ankylosing spondylitis), காச நோய் போன்றவற்றின் பாதிப்பாலும் கீழ் முதுகில் வலி வரும். சிறு வயதிலும் வாகன விபத்துகள் அல்லது விளையாடும்போது ஏற்படுகிற விபத்துகள் காரணமாக எலும்பு முறிந்து இந்த வலி ஏற்படலாம். சிலருக்குப் பிறவியிலேயே தண்டுவடம் செல்லும் பாதை குறுகலாக (Spinal canal stenosis) இருக்கும். இவர்களுக்குச் சிறு வயதிலேயே முதுகு வலி ஏற்படும். தசைப்பிடிப்பு முதுகெலும்பில் கட்டி அல்லது புற்று நோய் தாக்குவது காரணமாகவும் இந்த வலி வரும். கர்ப்பக் காலம், விபத்துக் காயங்கள், தசைப்பிடிப்பு, தசைநார் வலி, மன அழுத்தம், நீரிழப்பு போன்றவற்றாலும் முதுகு வலி வரும். கால்சியம் எலும்பின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியம் சத்து தேவை. வயது அதிகமாக அதிகமாகக் கால்சியத்தின் அளவு குறைந்து எலும்பு மெலிந்துவிடும். இதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்' (ஆஸ்டியோபோரோசிஸ்) என்று பெயர். இது கீழ் முதுகில் வலியை ஏற்படுத்தும்.
முதுகு வலிக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அடிப்படைக் காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று, இடைவட்டு விலகுவது (Disc prolapse). அடுத்தது, முதுகு முள்ளெலும்புகளின் (Vertebrae) பின்புறமுள்ள அசையும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது. இந்தக் காரணங்களால் தண்டுவட நரம்பு செல்லும் பாதை குறுகிவிடுகிறது. இதனால் தண்டுவட நரம்பு அழுத்தப்படுகிறது. இதைச் சுற்றியுள்ள ரத்தக் குழாய்கள் நெரிக்கப்பட்டு, ரத்த ஓட்டம் குறைந்து நரம்பு முறையாக இயங்க வழி இல்லாமல், வலி ஏற்படுகிறது. பொதுவாக, காலுக்கு வரும் சியாட்டிக் நரம்பு இவ்வாறு பாதிக்கப்படும். இதனால்தான் இதற்கு ‘சியாட்டிகா'(Sciatica) என்று பெயர் வந்தது. ஆரம்பத்தில் இந்த வலியானது, அவ்வப்போது கீழ் முதுகில் ஏற்படும். பெரும்பாலானோர் இதை வாய்வு வலி என்று தாங்களாகவே தீர்மானித்துக்கொண்டு, சிகிச்சை செய்யாமல் இருப்பார்கள். திடீரென்று ஒரு நாள் இந்த வலி கடுமையாகித் தொடைக்குப் பின்புறத்திலோ, காலுக்கோ மின்சாரம் பாய்வதைப்போல ‘சுரீர்' என்று பரவும். படுத்து உறங்கும்போது இந்த வலி குறைந்து, பிறகு நடக்கும்போது வலி அதிகமாகும். கால் குடைச்சல் தூக்கத்தைக் கெடுக்கும். காலில் உணர்ச்சி குறையும். நாளாக ஆக மரத்துப்போன உணர்வும் ஏற்படும். முதுகைப் பின்னாலோ, முன்னாலோ வளைப்பதில் சிரமம் உண்டாகும். பலமாக தும்பினாலும் உண்டாகும்.
பரிசோதனையும் சிகிச்சையும்
கீழ் முதுகு வலிக்குப் பல காரணங்கள்
இருப்பதால், முதுகு எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், ரத்தப் பரிசோதனைகள்
செய்து, காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். ஜவ்வு விலகுவதன் காரணமாக
ஆரம்பத்தில் ஏற்படுகிற கீழ் முதுகு வலிக்கு வலி நிவாரணிகளும் தசைகளைத் தளர்த்தும் மாத்திரை
/ ஊசிகளும் பலன் தரும். அத்தோடு குறைந்தது 3 வாரம் முழுமையாக ஓய்வு எடுப்பது, இடுப்பில்
பெல்ட் அணிவது, பிசியோதெரபி சிகிச்சையில் குணமாக அதிக வாய்ப்புகள் உள்ளன. தொடர்ந்து
பல வாரங்களுக்கு வலி இருக்குமானால், நடக்கவோ - நிற்கவோ முடியவில்லை என்றால். கால் மரத்துப்போனால்
அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும். இப்போது ‘லம்பார் எண்டோஸ்கோபிக் டிஸ்கெக்டமி'
(Lumbar Endoscopic Discectomy) எனும் நவீன அறுவை சிகிச்சையில் விலகியிருக்கும் இடைவட்டை
அகற்றித் தண்டுவட நரம்புப் பகுதியில் இருக்கிற அழுத்தத்தை நீக்கிவிடும்போது, கீழ் முதுகு
வலியும் கால் குடைச்சலும் சரியாகிவிடும்.
முதுகு வலியைத் தடுக்க
ஆபத்தை விலை கொடுத்து வாங்காதீர்
இதனை சைல்ட் (Child) போஸ்
முதுகும் இடுப்பும் இணைகிற இடத்தில்
பிடிப்பு வலி போல பிடித்துக் கொள்ளும் அதனை தவிர்க்க இந்த பயிற்சி செய்திடலாம். தரையில்
இரண்டு கால்முட்டியையும் ஊன்றி உட்கார வேண்டும். நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள்.
பாதம் இரண்டும் தரையில் படிந்திருக்க வேண்டும், ஒன்றோடொன்று சேர்ந்து வைப்பது, மேலும்
கீழுமாய் வைத்திருப்பது கூடாது. இப்போது கைகளை கைகளை தலைக்கு மேலே தூக்கி அப்படியே
உங்களுக்கு முன்னால் தரையில் வைக்க வேண்டும். கைகள், கழுத்து, முதுகு ஆகியவை நேர்கோட்டில்
இருக்க வேண்டும். தலையிலிருந்து கை சற்று மேலே இருக்க வேண்டும். பின் மேலே அப்படியேஎழுந்து
நார்மல் பொசிசனுக்கு வந்து மீண்டும் இதே போல செய்ய வேண்டும். இதை செய்யும் போது வேக
வேகமாக செய்யாமல் நிதானமாக ஆழமான மூச்சை இழுத்து விட்டபடி செய்திடுங்கள். இதனை ஒன்றிலிருந்து
மூன்று நிமிடங்கள் வரை செய்யலாம்.
முதுகுக்கு நல்ல நெகிழ்வுத்தன்மையை கொடுக்கும். ஒரேயிடத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்து பயணம் மேற்கொள்கிறவர்களுக்கு முதுகில் பிடித்துக்கொண்டதைப் போன்ற வலி ஏற்படும். அந்த நேரங்களில் இந்த பயிற்சி செய்வதால் நெகிழ்வுத்தன்மை கொடுப்பதினால் உடனடியாக ரிலிஃப் கிடைக்கும். இரண்டு கைகளையும் கால் முட்டிகளை தரையில் ஊன்றி நிற்க வேண்டும். யானை போஸில் நின்ற பிறகு மூச்சை நன்றாக உள்ளிழுத்துக்கொள்ளுங்கள். மூச்சை உள்ளிழுக்கும் போது உங்களுடைய இடுப்பு பகுதியை மேலே தூக்க வேண்டும். கவனம், அப்படி மேலே தூக்கும் போது கைகளையும், கால் முட்டியையும் விளக்கிவிடக்கூடாது அவை தரையிலேயே தான் இருக்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளிழுத்ததும் மெதுவாக அப்படியே மூச்சை வெளிவிடுங்கள். இப்படி வெளியிடும் போது மெதுவாக மேலே தூக்கிய இடுப்பு பகுதியை அப்படியே கீழேயிருக்கி நார்மல் பொசிசனுக்கு வந்துவிடலாம். ஐந்து முறை வரை இப்படிதொடர்ந்து செய்ய வேண்டும். மேலேதூக்கும் போது தலையை கீழே குனிந்து கொள்ளுங்கள் அதே போல கீழேயிருக்கும் போது தலையை குறிப்பாக கழுத்துப் பகுதியை மேல் நோக்கி வைத்துக் கொண்டால் இந்த பயிற்சி செய்ய எளிமையாக இருக்கும்.
முதுகுக்கு மட்டுமின்றி கால்
மற்றும் இடுப்புபகுதிக்கு வலுவூட்டுகிறது இந்த பயிற்சி. மிக எளிமையானது. இரண்டு பாதங்களுக்கும்
இடைவேளிவிட்டு தரையில் நேராக நிமிர்ந்து நின்று கொள்ளுங்கள். இப்போது உங்களுடைய வலது
பக்கம் குனிந்து வலது கையால் வலது காலை தொட வேண்டும். அதே நேரத்தில் இடது கை நேராக
மேல் நோக்கி இருக்க வேண்டும். இரண்டு கால்களுக்கும் இடையில் அதிக இடைவேளி இருப்பது
அவசியம். அப்படியே இடது பக்கம் என மாற்றி மாற்றி செய்ய வேண்டும்.
வாய்வுத் தொல்லைவுக்கு நிரந்தரமான தீர்வு
அடிக்கடி மக்களை பாதிக்கும் வயிற்றுப் பிரச்னைகளைப் பட்டியலிட்டால், அதில் `வாய்வுத் தொல்லை’க்கு முக்கிய இடமுண்டு. தமிழகத்தைப் பொறுத்தவரை படிக்காத பாமரர்கள்கூட `கேஸ் டிரபுள்’ (Gas trouble) என்ற வார்த்தையைத் தெரிந்திருந்து வைத்திருக்கிறார்கள். நோயைத் தெரிந்து வைத்திருப்பது மட்டுமல்ல... அதற்கான சிகிச்சையையும் அவர்களே செய்துகொள்கிறார்கள்.
எப்படி காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி போன்றவற்றுக்குத் தாங்களாகவே கடைகளில் மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிட்டுக் கொள்கிறார்களோ அவ்வாறே இந்த வாய்வுப் பிரச்னைக்கும் `இஞ்சி மரப்பா’வில் ஆரம்பித்து, `வெள்ளைப்பூண்டு, டைஜீன், ஜெலுசில், ஆன்டாசிட்’ என்று தங்களுக்குத் தெரிந்த எல்லா மருந்துகளையும் தங்கள் விருப்பப்படி பெட்டிக்கடையில் அல்லது மருந்துக்கடைகளில் வாங்கி, வாயில் அள்ளிப் போட்டுக் கொள்வதை நடைமுறையில் நாம் காண்கிறோம்.
வாய்வுத் தொல்லை: பசிக்குறைவு, புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல், அடிக்கடி வாய்வு வெளியேறுதல், வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல், குமட்டல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய உணவுப்பாதை பிரச்னையை அலோபதி மருத்துவம் `வாய்வுத் தொல்லை’ (Flatulence) என்கிறது. ஆனால், பொதுமக்களோ வாய்வுக்குத் துளியும் தொடர்பில்லாத முதுகுவலி, மூட்டுவலி, முழங்கால் வலி, விலாவலி, தசைவலி என்று உடலில் உண்டாகின்ற எல்லா வலிகளுக்கும் வாய்வுதான் காரணம் என்று முடிவு செய்து கொள்கிறார்கள்.
வாய்வு எப்படி உருவாகிறது?
மனித உடற்கூறு அமைப்பின்படி, சுவாசப்பை, உணவுப்பாதை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே வாய்வு இருக்க முடியும். நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல் தலை முதல் பாதம் வரை வாயு சுற்றிக்கொண்டு இருப்பதில்லை. அப்படிச் சுற்றினால் அது உயிருக்கே ஆபத்தாக அமையும். நாம் மூக்கு வழியாக சுவாசிக்கும் காற்று, தொண்டை மற்றும் சுவாசக்குழாய் வழியாக சுவாசப்பைக்குச் செல்வது உங்களுக்குத் தெரியும். இது ஒரு தனி வழி. இதற்கும் உணவுப்பாதைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. பிறகு எப்படி உணவுப்பாதைக்குக் காற்று வருகிறது?
பொதுவாகவே நாம் ஒவ்வொருவரும் உணவை உண்ணும்போது உணவுடன் சிறிதளவு காற்றையும் வயிற்றுக்குள் விழுங்கி விடுகிறோம். அதிலும் குறிப்பாக, அவசர அவசரமாக உண்ணும்போது, பேசிக்கொண்டே உண்ணும்போது, காபி, தேநீர் மற்றும் காற்றடைத்த மென்பானங்களைக் குடிக்கும்போது, மது அருந்தும்போது, சூயிங்கம் மெல்லும்போது, புகைபிடிக்கும்போது, சுருட்டு பிடிக்கும்போது, வெற்றிலை, புகையிலை மற்றும் பான்மசாலா போடும்போது,
அடிக்கடி தண்ணீர் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே உணவுடன் காற்றையும் விழுங்கி விடுகிறோம். இந்தக் காற்றில் 80% இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறி விடும். மீதி குடலுக்குச் சென்று, ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது. இந்தக் காற்று விழுங்கல் சாதாரணமாக இருந்தால் தொல்லை எதுவும் தருவதில்லை. அளவுக்கு மீறினால்தான் இது ஒரு `வாய்வுப் பிரச்சினை’யாக உருவாகும்.
குடலில் நொதிகள் குறைந்தால்.. வயிற்றில் வாய்வு உருவாக இன்னொரு வழியும் உள்ளது. அதாவது, குடலில் உணவு செரிமானமாகும்போது, அங்கு இயல்பாகவே உள்ள தோழமை பாக்டீரியாக்கள் பல வேதிமாற்றங்களை நிகழ்த்துகின்றன. அப்போது ஹைட்ரஜன், மீத்தேன், கரியமில வாயு போன்ற வாயுக்கள் உற்பத்தியாகின்றன.
இந்த வாயுக்கள் ஆசனவாய் வழியாக சத்தத்துடன் வெளியேறுகின்றன. சாதாரணமாக இந்த வாயுக்களில் துர்நாற்றம் இருப்பதில்லை. மாறாக, குடலில் சில நொதிகள் குறையும்போது புரத உணவு சரியாகச் செரிமானமாகாது. சில நேரங்களில் `அல்வளி பாக்டீரியா’க்களின் (Anaerobic bacteria) ஆதிக்கம் குடலில் அதிகரித்துவிடும். இந்த இரு நிலைமைகளில் அமோனியா, ஹைட்ரஜன் சல்பைடு, மெர்காப்டேன் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகும். இவை ஆசனவாய் வழியாக வெளியேறும்போதுதான் துர்நாற்றம் வீசும். மூக்கை மூடிக்கொள்ள வேண்டியது வரும்.
நம் தினசரி உணவில் பால், பருப்பு, கிழங்கு மற்றும் இனிப்பு வகைகளை அதிகமாக சேர்க்கும்போது, அடிக்கடி வறுத்த உணவுகளைச் சாப்பிடும்போது, இரைப்பை அழற்சி, இரைப்பைப்புண், குடல்புழுக்கள், பித்தப்பைக் கற்கள், மலச்சிக்கல், அமீபியாசிஸ், குடல்வால் அழற்சி முதலிய நோய்கள் உள்ளபோது வாய்வுத்தொல்லை அதிகமாகும்.
அதுபோல் உணவுப்பாதையில் ஏற்படும் காசநோய், கணையநோய், கல்லீரல்நோய், புற்றுநோய், குடலடைப்பு போன்றவற்றால் குடலியக்கம் தடைபட்டு வாய்வு அதிகரிக்கலாம். சிலருக்கு ரத்த அழுத்த மாத்திரைகள், வலிநிவாரணிகள், பேதி மாத்திரைகள், நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தொடர்ந்து சாப்பிடும்போது அவற்றின் பக்கவிளைவாக வாய்வுத் தொல்லை எட்டிப் பார்ப்பதுண்டு. மிகத்தவறான உணவுப்பழக்கம், சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை, உடற்பயிற்சியின்மை, முதுமை, உறக்கமின்மை, மன அழுத்தம் போன்ற வாழ்க்கை முறைகளும் வாய்வுத் தொல்லையை வரவேற்பவையே.
ஒருவருக்கு அடிக்கடி வாய்வுப் பிரச்னை தொல்லை தருமானால், வாய்வுக்குக் காரணம் உணவா, நோயா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். அதற்கு `இரைப்பை எண்டோஸ்கோப்பி பரிசோதனை’ (Gastro endoscopy), பேரியம் எக்ஸ்-ரே பரிசோதனை, வயிற்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (Ultra sound scan) மலக்குடல் அகநோக்கல் பரிசோதனை (colonoscopy), மலப்பரிசோதனை, ரத்தப்பரிசோதனை போன்றவை தேவைப்படலாம்.
வாய்வுத் தொல்லை வராமல் இருக்க வாய்வுத் தொல்லைக்குப் பெரும்பாலும் நம் தவறான உணவுமுறைதான் காரணமாக இருக்க முடியும். நம் அன்றாட உணவுமுறைகளில் சிறிது மாற்றம் செய்து கொண்டால் போதும், வாய்வுக்குத் தீர்வு கிடைத்துவிடும்.
இப்போது எல்லாமே அவசர யுகமாகிவிட்டது. உணவை அவசர அவசரமாக அள்ளிப் போட்டுக்கொண்டு வேலைக்கு ஓடுவது வழக்கமாகிவிட்டது. அது வாய்வுக்கு ஆகாது. சரியான உணவை, சரியான நேரத்தில் நிதானமாக மென்று சாப்பிடுங்கள். வாய்வுப் பிரச்னை பாதி சரியாகிவிடும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் ஒரேவேளையில் வயிறு நிறைய சாப்பிடுவதைவிட, சிறு இடைவெளிகளில் சிறிது சிறிதாகச் சாப்பிடுவது நல்லது. உணவு சாப்பிட்டதும் போதுமான அளவிற்குத் தண்ணீர் குடியுங்கள். பேசிக்கொண்டே சாப்பிடாதீர்கள்.
இரவு உணவை உறங்கச் செல்லும் இரண்டு மணிநேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுங்கள். காற்றடைத்த புட்டிப் பானங்களை உறிஞ்சுகுழல் மூலம் உறிஞ்சிக் குடிப்பதைத் தவிருங்கள். மது அருந்துதல், சூயிங்கம் மெல்லுதல், புகைபிடித்தல், சுருட்டு பிடித்தல், வெற்றிலை, புகையிலை மற்றும் பான்மசாலா பயன்படுத்துதல் போன்ற தீயபழக்கங்களை நிறுத்துங்கள். பல மணிநேரம் ஒரே இடத்தில் வேலை செய்கின்றவர்களுக்கும், வயதானவர்களுக்கும் வாய்வுத் தொல்லை அதிகமாக இருக்கும். இவர்கள் தினமும் 40 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து வந்தால் வாய்வு குறையும்.
துர்நாற்றத்ததுடன் வாய்வு வெளியேறினால் பால், முட்டை, இறைச்சி போன்ற புரத உணவுகளைத் தவிர்த்து விடுவது நல்லது. மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் முக்கியம். அடிக்கடி வாய்வு தொல்லை தருமானால் குடல்புழுவுக்கும் அமீபா கிருமிகளுக்கும் மாத்திரை சாப்பிடலாம்.வாய்வு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாதவை?
மொச்சை, பட்டாணி, சுண்டல், பயறுகள், பருப்பு வகைகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள், காரம் மற்றும் மசாலா மிகுந்த உணவுகள், எண்ணெயில் குளித்த, வறுத்த, பொரித்த உணவுகள், சாக்லெட், கேக், ஐஸ்கிரீம், பிஸ்கெட், கற்கண்டு போன்ற இனிப்புகள், புட்டிகளில் அடைத்த மென்பானங்கள், டின்களில் அடைத்து விற்கப்படும் செயற்கைப் பழச்சாறுகள் மற்றும் உணவுகள், பால் அல்வா, பால்கோவா, பாலாடைக் கட்டி போன்ற பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள்.
வாய்வு உள்ளவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டியவை உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகள், புரதம் மிகுந்த உளுந்து, முட்டை, மீன், இறைச்சி, முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், வாதுமை, வெங்காயம், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், அப்பம், அடை, அப்பளம், வடாகம், ரொட்டி, ஊறுகாய், சோளப்பொரி, காபி, தேநீர். இவை தவிர உங்களுக்கு எந்த உணவு சாப்பிட்டால் வாய்வு தொல்லை தருவதாக நினைக்கிறீர்களோ அதையும் குறைத்துக் கொள்ளுங்கள்.
வாய்வை உண்டாக்காத உணவுகள்?அரிசி, கம்பு, கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களில் தயாரிக்கப்பட்ட உணவுகள் (எடுத்துக்காட்டாக, இட்லி, இடியாப்பம், தோசை, புட்டு, ரவா உப்புமா, அரிசிச்சோறு, கம்பங்கூழ், கேப்பைக்கூழ், கேப்பைத் தோசை, சப்பாத்தி, கோதுமை தோசை). கேரட், பீட்ரூட், முள்ளங்கி, டர்னிப், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய், வெள்ளைப்பூண்டு, தக்காளி, பப்பாளி, எல்லா கீரைகள், புதினா, தேன், வெல்லம், சாம்பார், ரசம், மோர். இந்த உணவுகளைத் தேவையான அளவுக்குச் சாப்பிடலாம்.
பல மணிநேரம் ஒரே இடத்தில் வேலை செய்கிறவர்களுக்கும், வயதானவர்களுக்கும் வாய்வுத் தொல்லை அதிகமாக இருக்கும். தினம் 40 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து வந்தால் வாய்வு குறையும்.
அவசர அவசரமாக உண்ணும்போது, பேசிக்கொண்டே உண்ணும்போது, காபி, தேநீர் மற்றும் காற்ற டைத்த மென்பானங்களை குடிக்கும்போது, மது அருந்தும்போது, சூயிங்கம் மெல்லும்போது, புகைபிடிக்கும்போது, சுருட்டு பிடிக்கும்போது, வெற்றிலை, புகையிலை மற்றும் பான்மசாலா போடும்போது, அடிக்கடி தண்ணீர் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே உணவுடன் காற்றையும் விழுங்கி விடுகிறோம். இந்தக் காற்றில் 80% இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறிவிடும். மீதி குடலுக்குச் சென்று, ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது. வாயு முற்றினால் வாதம் என்பது ஓர் உண்மையாகும் எனவே எச்சரிக்கையாக இருப்பது நலம்.
வாயு நீங்க வழிகள்
பசும் பாலில் இஞ்சியை கலந்து குடிக்கலாம்
ஒரு மூன்று தினங்கள் வெறும் பழம் மற்றும் பழச்சாறு மட்டும் எடுத்துக்கொள்ளலாம்
சாப்பாட்டிற்கு 1 மணி நேரம் முன்னும் பின்னும் நிறைய தண்ணீர் குடிக்கலாம்
தினமும் காலை சுக்கு மல்லி காபியை குடிக்கலாம்
பத்து பூண்டு பற்களை பசும் பாலில் போட்டு காய்ச்சி குடிக்கலாம்
சுக்கை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்
புதினா கீரை, வெந்தியக் கீரை, முடக்கத்தான் கீரை, தூதுவளைக் கீரை, வள்ளக்கீரை போன்ற கீரைகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம் .
ஒரு கரண்டி சுக்கு பொடியை சுடு தண்ணீரில் கலக்கி குடித்தால் வாயு உடனடியாக குறையும்
ஒரு கரண்டி துளசி சாறு ஒரு கரண்டி இஞ்சி சாறு கலந்து காலை மாலை இருவேளையாக 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை குறையும்
முடக்கத்தான் ரசம் செய்து சாப்பிடலாம்
இஞ்சி சாறு கருப்பட்டி ஏலக்காய் கிராம்பு ஜாதிக்காய் சேர்த்து காய்ச்சி தினமும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர வாயு தொல்லை அறவே நீங்கும்
Sunday, September 20, 2020
tamil actors Birth Day list 2020
நடிகர்கள் & நடிகைகள்
ஆதி 14-டிசம்பர் -82
அப்பாஸ் 21-மே -75
ஆதித் அருண் 8 ஜூன்
ஆதித்யா மேனன் 06-ஏப்ரல் -74
அஜித் குமார் 01-மே -71
அகில் பாரூக் 03-மே -88
அக்கினேனி நாகார்ஜுனா 29-ஆகஸ்ட் -59
அக்கினேனி நாகேஸ்வர ராவ் 20-செப்டம்பர் -23
அல்லாரி நரேஷ் 30-ஜூன் -79
அல்லு சிரிஷ் 30-மே -87
அமீர் சுல்தான் 05-டிசம்பர் -66
ஆனந்தராஜ் 10-நவம்பர்
அர்ஜுன் சர்ஜா 15-ஆகஸ்ட் -64
அர்ஜுனன் 08-ஆகஸ்ட் -86
அரவிந்த் சுவாமி 30-ஜூன் -70
ஆர்யா 11-டிசம்பர் -80
ஆரிய 14-அக்டோபர் -82
அசோக் 12-டிசம்பர் -81
அசோக் செல்வன் 08-நவம்பர் -89
அதர்வ முரளி 07-மே -89
அவினாஷ் 22-டிசம்பர் -59
பாலா 19-டிசம்பர் -82
பாபி சிம்ஹா 06-நவம்பர் -81
பிரம்மநந்தம் 01-பிப்ரவரி -56
சி.அருன்பாண்டியன் 13-ஜூலை -58
சந்திரசேகர் 1954
சார்லி 06-மார்ச்-60
சேரன் 12-டிசம்பர் -70
சிரஞ்சீவி 22-ஆகஸ்ட் -55
சிட்டி பாபு 10-ஜனவரி-64
கொச்சின் ஹனீபா 22-ஏப்ரல் -51
டெல்லி கணேஷ் 01-ஆகஸ்ட் -44
தேவராஜ் 20-செப்டம்பர் -60
தனுஷ் 28-ஜூலை -83
ஜி.எம்.குமார் 26-ஜூலை
-56
கஞ்சா கருப்பு 05-ஜனவரி-76
ஜெமினி கணேசன் 17-நவம்பர் -20
கிரிஷ் கர்னாட் 19-மே -38
கவுண்டமணி 25-மே -45
ஹரிகுமார் 27-ஏப்ரல்
ஹரிஷ் கல்யாண் 29-ஜூன் -90
ஹரிஷ் உத்தமான் 05-ஏப்ரல் -82
ஜெகபதி பாபு 12-பிப்ரவரி -62
ஜெய் 06-ஏப்ரல் -85
ஜெய் ஆகாஷ் 18-மார்ச்
ஜெயம் ரவி 10-செப்டம்பர் -80
ஜெயமாலினி 22-டிசம்பர் -58
ஜெயபிரகாஷ் 14-ஜூன் -62
ஜீவா / ஜீவா 04-ஜனவரி-84
ஜிதன் ரமேஷ் 23-அக்டோபர் -82
கே.பாகியராஜ் 07-ஜனவரி-53
கே.எஸ்.ரவிக்குமார் 30-மே
-58
கார்த்திக் சிவகுமார் 25-மே -77
கார்த்திக் 13-செப்டம்பர் -60
கார்த்திக் குமார் 21-நவம்பர் -77
கருணாஸ் 21-பிப்ரவரி -70
கிஷோர் 14-ஆகஸ்ட் -74
கோட்டா சீனிவாச ராவ் 10-ஜூலை
-47
குணால் ஷா 21-ஆகஸ்ட் -76
குஞ்சன் 14-நவம்பர் -52
மகாத் ராகவேந்திர 18-பிப்ரவரி -87
மகேந்திரன் 23-ஜனவரி-91
மம்முட்டி 07-செப்டம்பர் -51
மணிவண்ணன் 31-ஜூலை -53
மனோபாலா 12-டிசம்பர் -53
மனோஜ் பாரதிராஜா 11-செப்டம்பர் -76
மயில்சாமி 05-ஜூன் -65
மிதுன் தேஜஸ்வி 15-டிசம்பர் -79
மோகன் ராவ் 10-மே -56
மோகன் பாபு 19-மார்ச்-52
மோகன் ராமன் 03-ஏப்ரல் -56
மோகன்லால் 21-மே -60
முகேஷ் ரிஷி 19-ஏப்ரல் -56
மும்தாஜ் 05-ஜூலை -80
முன்னா 01-மே -79
என்.சந்தனம் 21-ஜனவரி-80
நகுல் 15-ஜூன் -84
நானி 24-பிப்ரவரி -84
நெப்போலியன் துரைசாமி 02-டிசம்பர் -63
நரேன் 07-அக்டோபர் -80
நாசர் 05-மார்ச்-58
நவ்தீப் 26-ஜனவரி-86
நிதின் சத்யா 09-ஜனவரி-80
நிஜல்கல் ரவி 16-ஏப்ரல் -53
கருப்பு பாண்டி 26-ஏப்ரல் -86
பாண்டியராஜன் 02-அக்டோபர் -59
பசுபதி 18-மே -69
பொன்னம்பலம் 11-நவம்பர் -63
பொன்னவன்னன் 12-ஜனவரி-52
பிரபு கணேசன் 31-டிசம்பர் -56
பிரபு தேவா 03-ஏப்ரல் -73
பிரதீப் ராவத் 21-ஜனவரி-52
பிரகாஷ் ராஜ் 26-மார்ச்-65
பிரசன்னா வெங்கடேசன் 28-ஆகஸ்ட் -82
பிருத்விராஜ் சுகுமாரன் 16-அக்டோபர் -82
ஆர் மாதவன் 01-ஜூன் -70
ஆர்.பார்த்திபன் 14-நவம்பர் -57
ஆர்.சரத்குமார் 14-ஜூலை -54
ராகவா லாரன்ஸ் 09-ஜனவரி-76
ரகுவரன் 11-டிசம்பர் -58
ராகுல் ரவீந்திரன் 23-ஜூன் -81
ராஜசேகர் 04-பிப்ரவரி -62
ரஜினிகாந்த் 12-டிசம்பர் -50
ராஜ்கிரன் 26-ஆகஸ்ட் -54
ராம பிரபா 05-மே -47
ரம்பா 05-ஜூன் -76
ரவி கிருஷ்ணா 02-மார்ச்-83
ரவிச்சந்திரன் 13-மே -40
ரெஜித் மேனன் 05-மார்ச்-88
ரிச்சர்ட் ரிஷி 20-அக்டோபர் -77
ரியா பம்னியல் 28-அக்டோபர் -87
ரியாஸ் கான் 09-செப்டம்பர் -72
ரோஜா செல்வமணி 17-நவம்பர் -72
எஸ். ஜே. சூர்யா 20-ஜூலை
-68
எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் 04-ஜூன்
-46
சாக்ஷி சிவா 06-பிப்ரவரி -72
சஜித் ராஜ் 28-ஏப்ரல் -83
சாக்ஷி சிவானந்த் 15-ஏப்ரல் -77
சலீம் கவுஸ் 10-ஜனவரி-52
சம்பத் ராஜ் 15-ஜனவரி-76
சமுத்திரகனி 26-ஏப்ரல் -73
சரத் பாபு 31-ஜூலை -51
சத்யன் சிவகுமார் 11-ஜூன் -75
சத்யராஜ் 03-அக்டோபர் -54
சீனிவாசன் 1962
செந்தில் 23-மார்ச்-51
செந்தில் குமார் ஜி 18-அக்டோபர்
-78
ஷாம் 04-ஏப்ரல் -77
சங்கர் பானிக்கர் 22-ஜூன் -60
சாந்தனு பாக்யராஜ் 24-ஆகஸ்ட் -86
சிவன் 10-டிசம்பர் -82
சிவாஜி தேவ் 20-செப்டம்பர் -89
சிபிராஜ் 06-அக்டோபர் -82
சித்தார்த் 17-ஏப்ரல் -79
சிலம்பரசன் / சிம்பு 03-பிப்ரவரி -83
சிவாஜி கணேசன் 01-அக்டோபர் -28
சிவகார்த்திகேயன் 17-பிப்ரவரி -85
சிவகுமார் 27-அக்டோபர் -41
சோனு சூட் 30-ஜூலை -73
சூரி 27-ஆகஸ்ட் -77
ஸ்ரீச்சரன் ரங்கராஜன் 24-ஏப்ரல் -85
ஸ்ரீகாந்த் 28-பிப்ரவரி -79
ஸ்ரீநாத் 12-மே -68
சுபாலேகா சுதாகர் 19-நவம்பர் -60
சுசிந்திர பாலி 1976
சுதீப் 02-செப்டம்பர் -73
சுமன் செட்டி 01-மே -81
சுந்தர் சி 21-ஜனவரி-68
சுரேஷ் 26-ஆகஸ்ட் -64
சூரிய சிவகுமார் 23-ஜூலை -75
டி.ராஜேந்தர் 09-மே -55
தனிகெல்லா பரணி 14-ஜூலை -54
தருண் குமார் 08-ஜனவரி-83
தென்னவன் 16-நவம்பர் -66
உதய் கிரண் 26-ஜனவரி-80
உன்னி முகுந்தன் 22-செப்டம்பர் -87
உபேந்திரா 18-செப்டம்பர் -68
வெங்கட் பிரபு 07-நவம்பர் -75
வித்யுத் ஜம்வால் 10-டிசம்பர் -80
விஜய் 22-ஜூன் -74
விஜய் சேதுபதி 16-ஜனவரி-78
விக்ரம் கென்னடி 17-ஏப்ரல் -66
வினய் ராய் 24-பிப்ரவரி -78
வின்சென்ட் அசோகன் 07-அக்
வினு சக்ரவர்த்தி 15-டிசம்பர் -45
விஷால் கிருஷ்ணா 29-ஆகஸ்ட் -77
விஷ்ணுவர்தன் 18-செப்டம்பர் -50
விவேக் ஓபராய் 03-செப்டம்பர் -76
அபிநயஸ்ரீ 1983
அபிராமி 26-ஜூலை -83
ஐஸ்வர்யா அர்ஜுன் 10-பிப்ரவரி -90
ஐஸ்வர்யா மேனன் 08-மே -92
ஐஸ்வர்யா ராய் பச்சன் 01-நவம்பர்
-73
அக்ஷா பர்தசனி 08-நவம்பர் -91
அக்ஷர கவுடா 24-டிசம்பர் -89
அமலா அக்கினேனி 12-செப்டம்பர் -68
அமலா பால் 26-அக்டோபர் -90
அம்பிகா 06-நவம்பர் -63
எமி ஜாக்சன் 31-ஜனவரி -91
அமிரா தஸ்தூர் 07-மே -93
அனைகா சோதி 14-ஜனவரி-91
அனன்யா 29-மார்ச்-87
ஆண்ட்ரியா எரேமியா 21-டிசம்பர் -85
அனிதா ஹாசானந்தனி 14-ஏப்ரல் -80
அஞ்சலி 11-செப்டம்பர் -86
அஞ்சு 23-மார்ச்-75
அங்கிதா 27-மே
அனு பிரபாகர் 09-நவம்பர்
அனுபமா குமார் 04-டிசம்பர் -74
அனுராதா 1966
அனுஷ்கா ஷெட்டி 07-நவம்பர் -81
அபர்ணா பாஜ்பாய் 04-செப்டம்பர் -90
அர்ச்சனா குப்தா 28-மே -79
அர்ச்சனா காவி 04-ஜனவரி-90
அஸ்வினி 14-ஜூலை -69
அசின் தொட்டும்கல் 26-அக்டோபர் -85
பி.சரோஜா தேவி 07-ஜனவரி-38
பாமா 1989
பாரதி விஷ்ணுவர்தன் 15-ஆகஸ்ட் -50
பவானா 06-ஜூன் -86
பவ்யா 18-ஏப்ரல் -77
பூமிகா சாவ்லா 21-ஆகஸ்ட் -78
பிந்து மாதவி 14-ஜூன் -86
பிபாஷா பாசு 07-ஜனவரி-79
சார்மி கவுர் 17-மே -87
டெய்ஸி போபண்ணா 04-டிசம்பர் -82
தீக்ஷா சேத் 14-பிப்ரவரி -90
தன்யா மேரி வர்கீஸ் 17-செப்டம்பர்
-85
திவ்யதர்ஷினி 17-பிப்ரவரி -82
திவ்யா உன்னி 02-செப்டம்பர் -81
ஈஷா தியோல் 02-நவம்பர் -81
காயத்ரி சங்கர் 02-மே
கீதா விஜயன் 22-ஜூன் -72
ஜெனெலியா டிசோசா 05-ஆகஸ்ட் -87
கோபிகா 21-ஆகஸ்ட் -84
கவுரி முஞ்சல் 06-ஜூன்
-85
ஹன்சிகா மோத்வானி 09-ஆகஸ்ட் -91
ஹரிப்ரியா 29-அக்டோபர் -91
ஹேசல் கீச் 1987
ஹீரா ராஜகோபால் 29-டிசம்பர் -71
ஹேமா மாலினி 16-அக்டோபர் -48
ஹனி ரோஸ் 17-மே -89
இலியானா டி க்ரூஸ் 01-நவம்பர்
-87
இனியா 21-ஜனவரி-88
இஷா கொப்பிகர் 19-செப்டம்பர் -76
இஷிதா சர்மா 02-டிசம்பர் -92
ஜெய பிராடா 03-ஏப்ரல் -62
ஜெயச்சித்ரா 09-செப்டம்பர் -57
ஜெயலலிதா 24-பிப்ரவரி -48
ஜெயசுதா கபூர் 17-டிசம்பர் -58
ஜோதிகா 18-அக்டோபர் -78
ஜோதிர்மாயி 05-ஏப்ரல் -83
கே.ஆர்.விஜயா 30-நவம்பர்
-38
காஜல் அகர்வால் 19-ஜூன் -84
கல்பனா பிரியதர்ஷினி 05-ஜூன் -65
கமலினி முகர்ஜி 04-மார்
காம்னா ஜெத்மலானி 10-டிசம்பர் -85
காஞ்சன் 17-ஏப்ரல் -70
கனிகா 03-ஜூலை -82
கார்த்திகா அடைகலம் 1991
கார்த்திகா நாயர் 27-ஜூன் -92
கவுசல்யா 30-டிசம்பர் -79
காவ்யா மாதவன் 19-செப்டம்பர் -84
கிரண் ரத்தோட் 11-ஜனவரி-81
கிராத் பட்டல் 26-ஜன
கிட்டு கிட்வானி 22-அக்டோபர் -67
குஷ்பூ சுந்தர் 29-செப்டம்பர் -70
குட்டி பத்மினி 05-ஜூன் -56
லைலா மெஹ்தின் 24-அக்டோபர் -80
லட்சுமி நாராயண் 13-டிசம்பர் -52
லட்சுமி மேனன் 19-மே -96
லாவண்யா திரிபாதி 15-டிசம்பர் -90
மாடல்சா சர்மா 26-செப்
மதுபாலா 26-மார்ச்-72
மதுமிதா 20-ஆகஸ்ட் -84
மாதுரிமாதுலி 13-மே -85
மாளவிகா 19-ஜூலை -79
மம்தா மோகன்தாஸ் 14-நவம்பர் -84
மனிஷா கொய்ராலா 16-ஆகஸ்ட் -70
மஞ்சரி ஃபட்னிஸ் 10-ஜூலை -84
மனோரமா 26-மே -43
மன்யா 07-அக்டோபர் -82
மீனாட்சி தீட்சித் 12-அக்
மீராசோப்ரா 08-ஜூலை -83
மீரா மல்லிகை 15-பிப்ரவரி -82
மீரா நந்தன் 26-நவம்பர் -90
மேகனா ராஜ் 03-மே -90
மேக்னா நாயுடு 19-செப்டம்பர் -80
மித்ரா குரியன் 15-மே -89
மோகினி 09-ஜூன் -78
மிருதுலா முரளி 08-ஜூன் -90
நதியா 18-ஜூலை -69
நக்மா 25-டிசம்பர் -74
நமிதா 10-மே -81
நந்தினி ராய் 18-செப்டம்பர் -90
நந்திதா 30-ஏப்ரல் -90
நந்திதா தாஸ் 07-நவம்பர் -69
நவநீத் கவுர் 03-ஜனவரி-86
நவ்ய நாயர் 14-அக்டோபர் -85
நயன்தாரா 18-நவம்பர் -84
நஸ்ரியா நாஜிம் 20-டிசம்பர் -94
நீதுசந்திரா 20-ஜூன் -84
நிகேஷா படேல் 20-ஜூலை
நிகிதா துக்ரால் 06-ஜூலை -81
நிரோஷா 23-ஜனவரி-71
நித்யா மேனன் 08-ஏப்ரல் -88
நிவேதா தாமஸ் 15-அக்டோபர் -95
ஒவியா 29-ஏப்ரல் -91
பத்மபிரியா ஜனகிராமன் 28-பிப்ரவரி -80
பத்மினி ராமச்சந்திரன் 12-ஜூன் -32
பார்வதி 23-ஏப்ரல் -88
பார்வதி நாயர் 05-டிசம்பர்
பார்வதி ஓமானகுட்டன் 13-மார்ச்-87
பயல் கோஷ் 13-நவம்பர் -89
பியா பாஜ்பாய் 06-ஜனவரி-89
பூஜா காந்தி 07-அக்டோபர் -83
பூஜா குமார் 04-பிப்ரவரி -77
பூஜை ராமச்சந்திரன் 22-மார்ச்-84
பூஜா உமாஷங்கர் 25-ஜூன் -81
பூனம் பஜ்வா 05-ஏப்ரல் -89
பூனம் கவுர் 21-அக்டோபர் -83
பூர்ணிமா பாக்யராஜ் 18-ஜூலை -62
பூர்ணிதா 23-நவம்பர் -90
பிரணிதா சுபாஷ் 17-அக்டோபர் -92
பிரியாமணி 04-ஜூன் -84
பிரியங்கா கோத்தாரி 30-நவம்பர் -83
பிரியங்கா நாயர் 30-ஜூன் -85
ராதிகா சரத்குமார் 21-ஆகஸ்ட் -62
ராய் லக்ஷ்மி 05-மே -89
ராச்சனா பானர்ஜி 02-அக்டோபர் -78
ராச்சனா ம ur ரியா 21-ஜூலை
-87
ராதா 03-ஜூன் -66
ராதிகா குமாரசாமி 01-நவம்பர் -86
ராகினி திவேதி 24-மே -90
ரஜனி 27-ஜூலை -65
ராஜ்யலட்சுமி 18-டிசம்பர் -64
ரக்ஷிதா 31-மார்ச்-84
ரகுல் ப்ரீத் சிங் 10-அக்டோபர்
-90
ரம்யா 29-நவம்பர் -82
ரம்யா கிருஷ்ணன் 15-செப்டம்பர் -67
ரஞ்சிதா 04-ஜூன் -75
ரதி ஆறுமுகம் 23-செப்டம்பர் -82
ரதி அக்னிஹோத்ரி 10-டிசம்பர் -60
ரீமா சென் 29-அக்டோபர் -81
ரீனா 14-மார்ச்-58
ரெஜினா கசாண்ட்ரா 13-டிசம்பர் -88
ரேவதி 08-ஜூலை -66
ரிச்சா கங்கோபாத்யாய் 20-மார்ச்-86
ரிச்சா பல்லோட் 30-ஆகஸ்ட் -80
ரிமா கல்லிங்கல் 19-ஜனவரி-84
ரியா சென் 24-ஜனவரி-81
ரோகிணி 12-மார்ச்-68
ரோஜா ரமணி 16-செப்டம்பர் -59
ரோமா அஸ்ரானி 25-ஆகஸ்ட் -84
சாதா 17-பிப்ரவரி -79
சலோனி அஸ்வானி 01-ஜூன் -77
சமந்தா ரூத் பிரபு 28-ஏப்ரல்
-87
சமீரா ரெட்டி 14-டிசம்பர் -82
சம்விருதா சுனில் 31-அக்டோபர் -86
சனா கான் 21-ஆகஸ்ட் -87
சஞ்சிதா ஷெட்டி 07-ஏப்ரல் -89
காதல் சந்தியா 27-செப்டம்பர் -88
சஞ்சன 10-அக்டோபர் -89
சப்பன் சரண் 07-ஜூலை
சரண்யா மோகன் 09-பிப்ரவரி -89
சரண்யா 26-ஏப்ரல் -70
சீமா 22-மே -57
சீதா 13-ஜூலை -67
ஷஃப்னா 01-ஜூன் -91
ஷகீலா 22-மே -73
ஷாலினி குமார் 20-நவம்பர் -80
ஷாமிலி 10-ஜூலை -87
ஷமிதா ஷெட்டி 02-பிப்ரவரி -79
ஷம்மு 14-ஜூன் -92
ஷம்னா காசிம் 24-மே -89
ஷரதா 12-ஜூன் -45
ஷாஜான் பதம்ஸி 18-அக்டோபர் -87
ஷெரின் 05-மே -88
ஷில்பா ஷெட்டி 08-ஜூன் -75
ஷோபனா 21-மார்ச்-66
ஷ்ரத்தா ஆர்யா 17-ஆகஸ்ட் -87
ஸ்ரியா சரண் 11-செப்டம்பர் -82
ஸ்ருதி ராஜ் 27-மார்ச்-83
ஸ்ருதிஹாசன் 28-ஜனவரி-86
சிம்ரன் 04-ஏப்ரல் -76
சிந்து டோலானி 19-ஜூலை -83
ஸ்னிக்தா அகோல்கர் 03-மே -85
சோனா ஹைடன் 13-ஜூன் -79
சோனாலி பெந்திரே 01-ஜனவரி-75
சோனாலி குல்கர்னி 03-நவம்பர் -74
சோனியா. வி 04-ஜூன் -77
சோனியா அகர்வால் 28-மார்ச்-82
சோனு 23-மார்ச்-90
சவுந்தர்யா 18-ஜூலை -72
ஸ்ரீதேவி விஜய்குமார் 29-அக்டோபர் -86
ஸ்ரீவித்யா 24-ஜூலை -53
ஸ்ரியா ரெட்டி 03-ஏப்ரல் -83
ஸ்ருதி லட்சுமி 08-செப்டம்பர் -86
சுதா சந்திரன் 21-செப்டம்பர் -64
சுஹானி கலிதா 25-டிசம்பர் -91
சுஹாசினி மணிரத்னம் 15-ஆகஸ்ட் -61
சுஜாதா 10-டிசம்பர் -52
சுகன்யா 08-ஜூலை -69
சுனைனா 17-ஏப்ரல் -89
சுனிதா வர்மா 30-மே
சுஷ்மிதா சென் 19-நவம்பர் -75
ஸ்வர்ணாமல்யா 22-ஏப்ரல் -81
டாப்ஸி பன்னு 01-ஆகஸ்ட் -87
தபு 04-நவம்பர் -71
தமன்னா பாட்டியா 21-டிசம்பர் -89
தனிஷா முகர்ஜி 03-மார்ச்-78
தனு ராய் 26-டிசம்பர் -80
தனுஸ்ரீ தத்தா 19-மார்ச்-84
தன்வி வியாஸ் 30-செப்
தாரா 04-மார்ச்-73
த்ரிஷா 04-மே -83
உதயதாரா 16-மார்ச்-88
உன்னி மேரி 12-மார்ச் -62
ஊர்வசி 1970
வடிவுக்கரசி 06-ஜூலை
வாணி போஜன் 07-டிசம்பர் -88
வரலக்ஷ்மி சரத்குமார் 1985 மார்ச் 3
வர்ஷா அஸ்வதி 22-ஏப்ரல் -89
வேத சாஸ்திரி 08-அக்டோபர் -81
வேதிகா 21-பிப்ரவரி -88
வேகா தமோடியா 07-மே -85
வித்யுலேகா ராமன் 04-நவம்பர் -91
விஜயசாந்தி 24-ஜூன் -66
விஜி 1966
விஜி சந்திரசேகர் 02-டிச
விசாகா சிங் 05-மே -86
வித்திகா ஷெரு 1993
யமி கவுதம் 28-நவம்பர்
-88
யுவராணி 30-நவம்பர் -74
ஆரஞ்சு தோல் பொடி அழகு குறிப்புகள்
ஆரஞ்சு தோல் பொடியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது பல்வேறு சரும வகைகளை குறிப்பாக எண்ணெய் தோல் வகைகளை கொலாஜன் மற்றும் எலாஸ்டிக் உருவாக்குக...
-
ஆரஞ்சு தோல் பொடியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது பல்வேறு சரும வகைகளை குறிப்பாக எண்ணெய் தோல் வகைகளை கொலாஜன் மற்றும் எலாஸ்டிக் உருவாக்குக...
-
அழகான நிலப்பரப்புகள் மற்றும் வியப்பூட்டும் கட்டிடக்கலை கொண்ட அழகான இடங்களால் உலகம் நிறைந்துள்ளது. ஆனால் எந்த இடங்கள் நிலப்பரப்பை வாழ்வாதா...
-
நடிகர்கள் & நடிகைகள் ஆதி 14- டிசம்பர் -82 அப்பாஸ் 21- மே -75 ஆதித் அருண் 8 ஜூன் ஆதித்யா மேனன் 06- ஏப்ரல் -74 அஜித் ...