Thursday, March 18, 2021

முகச் சுருக்கம் நீங்க

  1.  நல்லெண்ணை, பாதாம் எண்ணை இரண்டையும் சமமாக எடுத்து உடல் முழுவதும் தடவி, 3 மணி நேரம் ஊறவையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முகச் சுருக்கம் மாறும்
  2. சந்தனம் சந்தனப்பொடியுடன், பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவர முகச் சுருக்கம் நீங்கும்.
  3. சிறிதளவு கடலை மாவுடன், கேரட் ஜூசை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவவும். இப்படி செய்தால், நாளடைவில் முகச்சுருக்கம் நீங்கும்.
  4. பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம். இதனால் சரும நிறம் கூடுவதோடு, சருமம் ஈர்ப்பதமாகவும் சுருக்கங்கள் இன்றியும் இருக்கும்
  5. அடிக்கடி தக்காளி சாறு அல்லது பாதாம் எண்ணெய் அல்லது நன்றாக பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால், விரைவில் சுருக்கம் உண்டாவது தாமதமாகும். உங்களது சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.
  6. பாலேட்டுடன் பன்னீர் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். பதினைந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ சருமம் இறுக்கமாகி மென்மையாகி விடும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று தடவை செய்வது நல்ல பலன் தரும்.
  7. எலுமிச்சையின் தோலை காய வைத்து பொடித்து பன்னீரில் கலந்து தயிர், முள்ளங்கி சாறு கலந்து முகத்தில் தேய்த்து ஊறியதும் கழுவினால் முகம் பளபளப்பாகும். இது உங்களது இளமையை கெடுக்கும் சுருக்கங்களை போக்கும்.
  8. தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.
  9. முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பாசிப்பயறு மாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
  10. சருமம் மிருதுத்தன்மையை இழந்து விட்டால், தக்காளி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள். இதனை தொடர்ந்து வாரம் இருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  11. இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.
  12. அ‌திகாக மே‌க்க‌ப் போ‌ட்டதா‌ல் சரும‌ம் இழ‌ந்த ஈர‌ப்பத‌த்தை‌ப் பெற தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை‌ முக‌ம் முழுவது‌ம் மசா‌ஜ் செ‌ய்து‌வி‌ட்டு தூ‌ங்குவது சரும‌த்‌தி‌ற்கு‌ம் ந‌ல்லது
  13. எலு‌ம்‌பி‌ச்சை சாறு, பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து இர‌வி‌ல் தட‌வி வ‌ந்தா‌ல் பருக்கள் நீங்கும்.
  14. வற‌ண்ட சரும‌ம் கொ‌ண்டவ‌ர்க‌ள் ம‌‌ஞ்ச‌ள் பூசுவதை‌த் த‌வி‌ர்‌த்து‌விடுவது‌ம், அ‌திககார‌‌த்‌திற‌ன் கொ‌ண்ட சோ‌ப்புகளை‌ப் போடுவதையு‌ம் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். இர‌வி‌ல் தூ‌‌ங்கு‌ம் போது தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து‌வி‌‌ட்டு தூ‌ங்குவது‌ம் ந‌ல்லது.
  15. 50 மிலி கிளிசரின் மற்றும் 50மிலி பன்னீர் ஆகிய இரண்டையும் ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்து கலந்து கொள்ளவும். கலந்தவுடன் இந்த கலவையை ஒரு காற்று புகாத பாட்டில் அல்லது ஜாரில் ஊற்றிக் கொள்ளவும். ஒரு காட்டன் பஞ்சில் இந்த திரவத்தை எடுத்து நீங்கள் பயன்படுத்தலாம். இரவு முழுவதும் அப்படி விட்டு விடுங்கள். மறுநாள் காலை உங்கள் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்.
  16. இரண்டு ஸ்பூன் சர்க்கரை, இரண்டு ஸ்பூன் கிளிசரின், இரண்டு ஸ்பூன் லாவெண்டர் எண்ணெய் அல்லது ஜிரேனியம் எண்ணெய், ஒரு ஸ்பூன் கல் உப்பு, அரை எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவை எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் போட்டு கலந்துக் கொள்ளவும். பின்பு இதனை உங்கள் சருமத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். இந்த கலவையில் உள்ள சர்க்கரை உங்கள் சருமத்தில் ஊடுருவி அழுக்கை போக்கி சருமத்தை சுத்தம் செய்கிறது. பின்னர் தண்ணீரால் உங்கள் சருமத்தை கழுவினால் ஒரு மிருதுவான சருமம் தயார்.
  17. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்வோம். ஒரு ஸ்பூன் சோளமாவு, இரண்டு ஸ்பூன் ஐஸ் தண்ணீர், ஒரு ஸ்பூன் கிளிசரின் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு, முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி காய விடவும். பின்பு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்


ஆரஞ்சு தோல் பொடி அழகு குறிப்புகள்

ஆரஞ்சு தோல் பொடியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது பல்வேறு சரும வகைகளை குறிப்பாக எண்ணெய் தோல் வகைகளை கொலாஜன் மற்றும் எலாஸ்டிக்  உருவாக்குக...